முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மனோரமா கவலைக்கிடம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, அக்.- 30 - பிரபல நடிகை மனோரமா கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தார். இரவில் பாத்ரூம் சென்ற போது மனோரமா திடீரென வழுக்கி விழுந்தார். நெற்றியில் பலத்த அடிபட்டது. தைலம் போட்டு தேய்த்து சகஜ நிலைக்கு வந்தார். சென்னை திரும்பிய அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன் நெற்றியில் அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக தேனாட்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர் அவரை பரிசோதித்த போது நெற்றியில் ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தக் கட்டை கரைக்க மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது திடீரென மயக்கமாகி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். நடிகை மனோரமா எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் உட்பட அந்தக் கால முன்னணி கதாநாயகர்களுடன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடனும் ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனி முத்திரையை பதித்தவர் மனோரமா. நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமின்றி, குணச்சித்திர வேடங்களையும் ஏற்று மக்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் மனோரமா. அவர் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago