முக்கிய செய்திகள்

குஜராத் மதக் கலவரம்: முக்கிய சாட்சி கொலை

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத், நவ. - 7 - குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நிகழ்ந்த மத கலவரத்தில் முக்கிய சாட்சியான நதீம் அகமது சயீத் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.  2002 ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்பு குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரம் வெடித்தது. அப்போது நரோடா பாட்டியா பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் நதீம். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட கலவர வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார்.  இந்நிலையில் ஜூஹாபுரா பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே வந்த நதீமை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நதீம் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறியும் சட்ட ஆர்வலராகவும் நதீம் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: