முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீராமுலு இன்று முடிவு

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, நவ.- 8 - பெல்லாரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை இன்று சந்தித்த பிறகு முடிவு  செய்வேன் என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார். கர்நாடகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள்  எழுந்தபோது அம்மாநில அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலுவின் பெயரும்  சர்ச்சையில் சிக்கியது. இதை அடுத்து அவர் தனது  அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ.பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்தார்.  ஆனால் அதன் பிறகு அவர் மீது எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவரது சொந்த தொகுதியான பெல்லாரி ஊரக சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிட வேண்டும் என்று  அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.  நேற்று முன்தினம்  பெல்லாரி நகரில் நடந்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற  ஸ்ரீராமுலு இது குறித்து  தனது முடிவு எதையும் வெளியிடவில்லை. நேற்று இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய  ஸ்ரீராமுலு,  தான் இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதா அல்லது  பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதா என்பது குறித்து  கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை  சந்தித்து பேசிய பிறகே முடிவு செய்யப்படும் என்று கூறினார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை இன்று சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது இது குறித்து   முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள  ஜனார்த்தன் ரெட்டி தற்போது  ஐதராபாத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை  இன்று சந்தித்து பேச இருப்பதாக ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
பெல்லாரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் ஸ்ரீராமுலுவுக்கு மீண்டும்  அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறியுள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!