முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியாமங்கலம் மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, டிச.15- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தனியாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.9,12,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் சகாயம்அவர்கள் வழங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தனியாமங்கலத்தில் புதிதாக ஒரு நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் குத்துவிளக்கேற்றி முதல் விநியோத்தை துவக்கி வைத்தார்.  இந்த முழுநேர நியாயவிலைக்கடை துவங்கியதன் மூலம் 511 குடும்பங்கள் பயன் பெறுகின்றன.  அதன்பிறகு மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:

 

மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிற இந்த மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  இன்று 308 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.  இந்த மக்கள் தொடர்பு முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீது விதிக்கும், நிதிக்கும் உட்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இந்த நல்ல நிகழ்விலே ாமுல்லை பெரியாறு அணைக்கு முன் நின்ற பெரியோனை போற்றுவோம்ா என்ற முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னி குக்கை பற்றிய புத்தகத்தை வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  அந்த காலத்திலே தமிழ் மக்களுக்கு தமிழ் மக்களின் வேளாண்மையை பெருக்குவதற்கு அடித்தளமாக முல்லை பெரியாறு அணையை நிறுவியவர் பொறியாளர்.பென்னிகுக்.  வெள்ளைக்காரன் தேசத்திலிருந்து தமிழ் மக்கள் வாழ்வாதாரத்திற்காக பெரியாறு அணையை நிறுவிய மிகச்சிறந்த பொறியாளர் பென்னிகுக்-ஐ பற்றிய இந்த தகவல் திரட்டை உருவாக்கியிருக்கின்ற தனியாமங்கலத்தை சார்ந்த விவசாயி திரு.வி.மாதவன் மற்றும் இதற்கு தகவல்களை தொகுத்த அப்பாஸ் அவர்களையும் மனதார பாராட்டுகிறேன்.

 

  தமிழக முதலமைச்சர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.  அதில் முதியோருக்கு மகன்கள் இருந்தால், அந்த மகனும் வறுமையில் இருந்தால் அந்த முதியவர்களை தகுதியுடையவர்களாக கருதி அவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.  தன்னுடைய மகன் தன்னை புறக்கணித்த போதும் அவனை பாசத்தோடு ஏற்றுக் கொள்கிற ஒரே ஜீவன் தாய்.  கிராமங்களில் கோபம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாசம் அதிகமாக இருக்கும்.  முதியோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியுடைய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார். 

 

இன்று இந்த மனுநீதிநாள் முகாமில் விதவை உதவித்தொகை 21 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.21,000ம், கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை 10 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.10,000ம், ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகையாக 24 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.24,000ம், மாற்றுத் திறனாளி உதவித்தொகையாக 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000ம், திருமணமாகாத முதிர்கன்னி உதவித்தொகையாக 2 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000ம், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 25 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.25,000ம், நலிந்தோர் உதவித்தொகையாக 12 பேருக்கு தலா ரூ.10000 வீதம் ரூ.1,20,000ம், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் ஓய்வுதிையம் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை 16 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.16,000ம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 19 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1,90,000ம், இயற்கை மரணம் மற்றும் ்மச்சடங்கு உதவித்தொகை 28 பேருக்கு தலா ரூ.12,500 வீதம் ரூ.3,50,000ம், 50 நபர்களுக்கு தலா ரூ.3000 மதிப்புள்ள இலவச தையல் இயந்திரங்கள் ரூ.1,50,000 மதிப்பிலும், ஆக மொத்தம் ரூ.9,12,000டி- க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாவித்திரி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் செல்வசுந்தரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ஜெய்சிங்ஞானதுரை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மு.ஜெயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.பால்சுந்தர்ஜான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் காமாட்சி கணேசன், மேலூர் வட்டாட்சியர் மோகனா மற்றும் வருவாய்த்துறை, வளர்;ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago