முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.03 - அரியானாவில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நில பேர ஊழல் விவகாரம் குறித்து கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை தட்டிவிட்டு ராபர்ட் வதேரா ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜ பெரும் பான்மையாக வெற்றி பெற்று மனோகர் லால் கட்டார் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, டிஎஸ்எப் நிறுவனத்திற்கு இடையிலான நிலபேரத்திற்கு முந்தைய காங்கிரசின் ஹூடை அரசு அனுமதி வழங்கியதாக பஜ குற்றம் சாட்டியது.

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும் இதுகுறித்து பகிரங்க மாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நிலபேர ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டார் தலைமையிலான புதிய பாஜ அரசு தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில், வதேரா எந்த தவறும் செய்யவில்லை, விசாரணையை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தது.

இந்த சூழலில் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ராபர்ட் வதேரா வந்திருந்தார். அப்போது அவரை நிருபர் ஒருவர் நெருங்கி அரியானா நில பேர ஊழல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த வதேரா, நிருபரை நோக்கி மு்டடாள்தனமான உனது உளறல்களை நிறுத்து, வீடியோ கேமராவை அணைத்து விட்டு தள்ளிப் போ என்று ஆவேசமாக கூச்சலிட்டார். மைக்கை தட்டிவிட்டபடியே அங்குருந்து வெளியேற முயன்றார். இதனை கண்டு நிருபர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாதுகாவலர்கள் விரைந்து வந்து நிலைமையை சமாளித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து வதேரா தரப்பில் வெளியான அறிக்கையில், அது ஒரு தனியார் சந்திப்பு. பத்திரிக்கையாளர் யாரையும் அப்போது சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. நிருபர் தரப்பில் கூறும்போது, ஏற்கெனவே ஓட்டலுக்குள் வைத்து இரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்த வதேரா, நிலபேர விவகாரம் குறித்து கேட்டபோதுதான் ஆவேசம் அடைந்தார் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நிருபர் தரப்பில் இருந்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago