முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

சீனாவின் பெரிய புதையல்

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நதியிலிருந்து, சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய 10,000 க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். மேலும், பெரும் அளவில் வெண்கலத்தால் ஆன நாணயங்கள், வாள்கள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் இரும்பு ஆயுதங்களும் கிடைத்துள்ளன. 1646-ம் ஆண்டில், ஜியான்ஜோங் என்ற விவசாயிகள் தலைவர் மிங் வம்சவளியனரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது அவரது செல்வங்களை படைவீரர்கள் சிச்சுவான் உள்ள நதி வழியாக 1000 படகுகளில் எடுத்து சென்றபோது படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது. வறண்ட காலத்தில் நதியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி ஆராய்ச்சியாளர்கள் தோண்டியதில்  இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிசய பாறை

மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து போன்ற பாறை தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே இருக்கிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக அறியப்படும் இது இயற்கையாக வந்ததா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது.

மறதி நகரம்

பெங்களுருவில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாக தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் தெவிக்கின்றன. செல்போனுக்கு இந்த பட்டியலில் முதலிடம்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதால் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

நீதிமன்றம் வைத்திருக்கும் பறவை

காகங்கள் உலகில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள். கருவிகளைப் பயன்படுத்தக்கூடியதும் கருவிகளை உருவாக்கக்கூடியதுமான ஒரே பறவை காகம்தான். ஒரு காகம் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது. ஆபத்து பற்றிய தகவல்களை மற்ற காகங்களுடன் அவைகள் தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்ளும். காகங்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க நீதிமன்றம் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. அங்கு அவைகள் இளவயது காகங்கள் உணவை திருடுவது போன்று செய்யும் எந்த குற்றத்தையும் செய்த காகத்தை தண்டிக்கிறது. இது காகங்களிடம் காணப்படும் வித்தியாசமான செயல் என சொல்லப்படுகிறது. ஒரு வேலையை வெற்றியாக செய்து முடித்த பிறகு மனிதர்கள் உணரும் சாதனை உணர்வைப் போலவே ஒரு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு காகங்களும் அதிக நம்பிக்கையுடன் நடந்து கொள்கின்றனவாம். மனிதர்களைப் போலவே காகங்களும் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago