முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் அதிபர்

நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு அதிபர் கிடைப்பார் என ராபர்ட். எப். கென்னடி கூறியது போல, ஒபாமா அதிபரானார். இவர், ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்தவர்.  2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் இவர் தான்.

ஹிட்லரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய ஹாக்கி வீரர்

உலகையே ஆட்டி படைத்த சர்வாதிகாரியான ஹிட்லரின் கோரிக்கையையே ஏற்க மறுத்த இந்திய ஹாக்கி வீரர் ஒருவர் இருந்தார். அவர் யார் என்று தெரியுமா... அவர் பிரபல ஹாக்கி வீரர் தயான் சந்த்.  இந்தியா கடந்த 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியை 8-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதும், பிரபல ஹாக்கி வீர்ர தயான் சந்திற்கு, ஹிட்லர் ஜெர்மனி குடியுரிமை தந்து ராணுவத்தில் மிகப்பெரிய பதவி அளிப்பதாகவும் கூறினார். அவற்றை ஏற்றுக்கொண்டு ஜெர்மனி ஹாக்கி அணியில் அவர் விளையாட வேண்டுமென ஹிட்லர் விரும்பினார். ஆனால் தயான் சந்த் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

நிறம் மாறிய பூக்கள்

கால நிலை மாற்றத்தால் பூக்களின் நிறங்களும் மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்காக நீங்கள் பரிசளிக்கும் ரோஜாவின் நிறம் ஒரே இரவில் மாறிவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கால நிலை மாற்றத்தால் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக புற ஊதா கதிர்களின் வீச்சு காரணமாக இது போன்ற மாற்றங்கள் தாவரங்ளில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கடந்த 2020இல் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள கிளம்சன் பல்கலை நடத்திய ஆய்வில் புற ஊதா கதிர்கள் பூக்களின் வண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவ்வாறு ஏற்பட்டுள்ள வண்ண மாற்றத்தை நமது வெறும் கண்களால் உணர முடியாது. ஆனால் அதே நேரத்தில் மகரந்த சேர்க்கைக்காக ஈர்க்கப்படும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது என்பதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் கிருமிகள்

நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத 2 வித பாக்டீரியா, பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டுமாம்.

பூமி ஆச்சரியம்

பூமியின் உள்மையப்பகுதியில் நடத்திய ஆய்வில், 85 சதவீதம் இரும்பு, 10 சதவீதம் நிக்கல், எஞ்சிய 5 சதவீதம் சிலிக்கான் உள்ளதாம். மேலும், இந்த ஆய்வில் 4500 ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்திருக்கும் என்று அறியமுடியுமாம்.

அருகில் இருக்கு

இன்றைய சூழலில், பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களை கண்டறிய, இணையத்தின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், தனது ஹோம் பேஜில், சர்ச் பார் எனும் தேடுதலுக்கான வார்த்தைகளை உள்ளீடு செய்யும் இடத்துக்குக் கீழ் கொண்டு வரப்ப ட்டுள்ள ஃபைன்ட் ஆன் ஏ.டி.எம் நியர் யு (Find an ATM near you) வசதி மூலம் அருகிலுள்ள ஏ.டி.எம் மையங்களை தெரிந்து கொள்ளலாம்.  கூகுள் மேப் உதவியுடன் அளிக்கப்படும் இந்த வசதி மூலம் அருகிலுள்ள வங்கிக் கிளைகளை உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் ஏற்கனவே இருந்தாலும், முக்கியத்துவம் கருதி கூகுள் ஹோம் பேஜுல் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago