முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

எட்டே மாதத்தில் ...

பஞ்சாபை சேர்ந்த ரீனா - சூரஜ் குமார் தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு வயது எட்டு மாதம். ஆனால் பத்து வயது குழந்தை சாப்பிடும் உணவை இந்தக் குழந்தை சாப்பிடுவதுதான் ஆச்சரியம். இதனால் இந்த குழந்தையின் எடை தற்போது 17 கிலோவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, மூச்சு விடுவதற்கும் தூங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரல் தேடல்

இணையதளத்தில் தகவலை தேட வேண்டுமென்றால் குரல்வழி மூலம் கூகுள் தேடுபொறியில் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை கூகுள் சேர்த்துள்ளது.

உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம்

உலகின்  முதல் முழு நீள அனிமேஷன் சினிமா எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா.. நாம் அனைவரும் யூகிப்பது போல அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டிலோ.. இங்கிலாந்திலோ அல்ல. மாறாக உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்டது.  El Apóstol  என்று பெயரிடப்பட்ட அரசியல் நகைச்சுவை படமாக இந்த படம் 1917 இல் தயாரிக்கப்பட்டது. 70 நிமிடங்கள் கொண்ட அப்படத்தை  Quirino Cristiani என்ற இத்தாலியர் அப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், பெரும்பாலும் 1937 இல் வால்ட் டிஸ்னியால் எடுக்கப்பட்ட Snow White and the Seven Dwarfs என்ற படத்தையே முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள அனிமேஷன் படம் என பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த அர்ஜென்டினா படம் கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்து வரும் மனித உடலின் வெப்பம் கடந்த 10 ஆண்டுகளில் 0.05F சரிவு

பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று நாம் படித்திருப்போம். 1851 ஆண்டில் கார்ல் ரெய்னஹோல்டு என்பவர் தெர்மோமீட்டரை கண்டு பிடித்தார். அவர் 10 தடவை 25000 பேர்களிடம் ரீடிங் எடுத்து, சராசரியாக மனித உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று அறிவித்தார். இதையே அனைவரும் வேத வாக்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி குறைவாகவே காணப்படுவது தெரியவந்துள்ளது. பல்வேறு பதிவுகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் மேற்கொண்ட சோதனையில் கடந்த 100 ஆண்டுகளில் மனித உடலின் வெப்ப நிலை1.5 பாரன்ஹீட் குறைந்துள்ளது. இது போக கடந்த சில ஆண்டுகளில் இந்த குறைகின்ற வேகம் அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் 0.05 பாரன்ஹீட் வெப்பம் குறைந்து வந்துள்ளது. வழக்கம் போல புவிவெப்பமயமாதல் என்ற பல்லவி பாடப்படுகின்ற போதிலும் இதற்கான சரியான அறிவியல் காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பதுதான் உண்மை.

இணையதள சேவை

முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும், அக்யூலா என்ற குறைந்த எடையுள்ள ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்