முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரண்டு அணுகுண்டு வீச்சில் தப்பியவர்

உலக வரலாற்றில் 1945 ஆகஸ்ட் 9 ஐ மக்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே போல மறுநாள் ஆகஸ்ட் 10. ஏன்? கொடிய அமெரிக்கா உலகையே உலுக்கும் வகையில்  ஜப்பான் மீது அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அணுகுண்டை இனி பயன்படுத்தினால் உலகம் என்னவாகும் என்பதற்கு துயர சாட்சியாக நின்ற நாள். சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்தனர். தலைமுறை தலைமுறையாக அதன் கதிர்வீச்சு பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் ஒரு அதிசயம் நடந்தது. அணுகுண்டு வெடித்த போது சற்று தொலைவில் இருந்த ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் தனது 93 வயது வரை வாழ்ந்து அந்த துயர சம்பவத்தின் உயிர் சாட்சியாக  விளங்கினார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி. அணுகுண்டு வெடித்த போது அவருக்கு வயது 29. கடந்த 2009 இல் தனது 93 வயதில் சிறுநீரக மற்றும் வயிற்று புற்றுநோயால் மறைந்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.

தூக்கம் கெடும்

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

தேள் ராணி

50 ஆயிரம் தேள்களுடன் 33 நாட்கள் இருந்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர். இதனால் இவர் "தேள் ராணி" என அழைக்கப்படுகிறார். தாய்லாந்தை சேர்ந்தகாஞ்சனா கேட்சாவ் என்பவர் கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இதற்கு முன்னர் 3 நிமிடங்கள், 28 நொடிகள் டஜன் கணக்கில் கொடிய விஷம் கொண்ட தேள்களை தனது முகம், கழுத்து மற்றும் கைகளில் உலாவ விட்டு கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இரண்டாவது முறையாக 50,000 தேள்களுடன் 12 மீட்டர் சதுர கண்ணாடி உறைக்குள் 33 நாட்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தேள்களின் கண்பார்வை மிகவும் மங்கலானது, அது வாசனையை வைத்தே தனது உணவினை தேடிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

பருக்கள் மறைய...

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, பின் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயார்  செய்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்