முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நானோ சார்ஜ்ர்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. 'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில்  அதை சார்ஜ் செய்து விடலாம்.

இயற்பியலில் 2 முறை நோபல் பரிசு பெற்றவர் யார் தெரியுமா?

ஜான் பர்தீன் என்பவர் தான் இயற்பியலில் 2 முறை நோபல் பரிசு பெற்றார். முதன் முறையாக 1956 இலும், அதன் பிறகு 1972 இலும் அவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முறையாக டிரான்ஸ்சிஸ்டர் குறித்த கண்ட பிடிப்புக்கும், சூப்பர் கன்டக்டிவிட்டி குறித்த ஆய்வுக்கும் அவருக்கு இரண்டு முறை நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. அவரது டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிப்பு மூலம் தான் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஒரு மிகப் பெரிய புரட்சியே ஏற்பட்டது.

இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

பூமியை தொடர்ந்து ...

பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அங்கு இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் உருவாக்கி உருளைக்கிழங்கை விளையவைத்துள்ளனர்.

பேச முடியாது

குரங்குகளால் மனிதர்கள் போல் பேச முடியுமா? என்ற ஆராய்சியில், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருந்தாலும், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என தெரியவந்துள்ளது.

குட்டைப் பாவாடை

ஆடைகள் ஆண் பெண் வேறுபாட்டை காட்டி வருகின்றன என்ற போதிலும் பால் பேதத்தை, அதாவது பாரபட்சமான அணுகுமுறையை அவை உருவாக்கக கூடாது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பாலின சமத்துவத்தை அதான்ங்க.. ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்யும்  வகையில் ஸ்பெயினில் உள்ள பில்பாவ் நகரில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு குட்டை பாவாடை அணிந்து வந்த 15 வயது சிறுவனை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரத்தில் அமைந்திருக்கும் Castleview Primary Schoolதான் தற்போது தனது பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் குட்டை பாவாடை அதாவது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. பாலின பேதத்தை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்