முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

15 ஆண்டுகளாக மலையை குடைந்து சாலை அமைத்த மக்கள்

மலைச்சாலைகள் எப்போதும் நம்மை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்துபவைதான். ஆனால் அதே நேரத்தில் மிக அபாயகரமான இடங்களில் கூட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை கண்டால் யாருக்கும் லேசாக ஜெர்க் ஆகும் தானே.. ஆனால் சீனாவில் உள்ள சாங்சி மாகாணத்தில் உள்ள Shenlongwan என்ற பகுதிக்குச் செல்லும் மலைச்சாலை சற்றே வித்தியாசமானது. அது என்ன என்கிறீர்களா.. 1526 மீட்டர் நீளமே கொண்ட இந்த மலைச் சாலையை அப்பகுதி கிராம மக்களே சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளாக மலையை குடைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த 1985 இல் தொடங்கிய பணிகள், இதன் இறுதி கட்ட பணிகள் கடந்த 2000 இல்தான் முடிவடைந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உலகம் முழுவதும் எத்தனை புத்தகங்கள் உள்ளன தெரியுமா?

கூகுள் அளிக்கும் தகவல்படி 2010 ஆம் ஆண்டு வரை  வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 129,864,880 மில்லியன் புத்தகங்கள் என கூறப்படுகிறது. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிக எண்ணிக்கையிலானதாகும். எனவே இனி யாரும் எனக்கு படிக்க ஒரு நல்ல புத்தகம் கூடி கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாதல்லவா.

வாட்ஸ் அப் அப்டேட்

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது வீடியோ கால் திரையை சிறிதாக்கி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவேற்றம் செய்யும் வசதியை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த ஸ்டேட்டஸ்களில் டெக்ஸ்ட் செய்து பகிர்ந்து கொள்ளும் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

பழங்கால கல் கோளங்கள் அல்லது கல்பந்துகள் எங்குள்ளன தெரியுமா?

பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..

கூடும் நேரம்

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago