முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டைட்டானக்கில் நாயகி ஓவியத்தை வரைந்தது யார் தெரியுமா

டைட்டானிக் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். இதில் மைய பாத்திரங்களாக லியோனார்டோவும், கதே வின்ஸ்லெட்டும் நடித்திருப்பர். ஒரு சந்தர்ப்பத்தில் நாயகியை நாயகன் ஓவியமாக தீட்டுவது போன்ற காட்சி இருக்கும். அப்போது அந்த ஓவியத்தை வரைவது போன்ற கரங்கள் மட்டுமே காட்டப்படும். அந்த ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமல்ல... படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனேதான். அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்றால் ஆச்சரியம் தானே..

புகைக்கு பதிலாக நீரை வெளியேற்றும் கார்

பொதுவாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் என்றாலே புகையை கக்கிக் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீரை வெளிவிடும் கார் வந்துள்ளது தெரியுமா.. இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டாவின் இந்த மிராய் வகைக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டவை. பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவாற்றலை அதிகரிக்க

மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் எனவும் சிந்தனைத் திறனை மேம்படுகிறதாம்.மேலும், அவர்களின் மூளை ஐந்து வயது இளமையாகி விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக 60 சதவீதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு 63 நிமிடங்கள் தூங்குகிறார்களாம்.

எய்ட்ஸ் நோய்

உலகம் முழுவதும் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கும் எய்ட்ஸ் நோய்க்கு முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம். உயிர் இழப்புகளை தடுத்து விடலாம். விரைவில் இந்த மருத்துவ முறையை மனிதனிடம் சோதனை நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

தூக்கம் தான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது

பலரும் உறக்கத்தை வெறுமனே ஓய்வெடுப்பதற்கான இன்டர்வெல்லாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உறக்கமா நாம் அறியாத பல விசயங்களை உள்ளடக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நீங்கள் எந்த நிலையில் உறங்குகிறீர்கள் என்பது தான் உங்களது ஆளுமையை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் கிரிஷ் இட்ஷிகோவிஸ்கி கூறுகையில், கருவில் இருப்பதை போல உறங்க விரும்புபவர்கள் பார்க்க கடினமானவர்களாக தோன்றினாலும், மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார் என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆளுமை இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்