முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆந்த்ராக்ஸ் தீவு

வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. 2-ம் உலக போரின் போது பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்ததால் அந்த தீவு முற்றும் நாசமானது. இதனால் 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

மகளிர் நினைவாக

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

உயரமான இடத்தில்...

மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலையில் சிகரங்களில் ஏறுவதற்காகக் கூடும் (கடல்மட்டத்தில் இருந்து 5,360 மீ (17,600 அடி) உயரத்தில் உள்ள ) பேஸ் கேம்ப் பகுதியில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இது நிறுவப்பட்டால் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை வசதியாக அமையும்.

குழந்தைகளை கண்டறிய

கடந்த ஜனவரி 2012 மற்றும் மார்ச் 2017 இடையே 2.5 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சென்னையை இரு இளைஞர்கள் மொபைல் ஆப் ஒன்றை கண்டறிந்துள்ளார். முகங்களை அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 'ஃபேஸ்டேக்ர்' எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதில்  காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அதன் மூலம் அந்த குழந்தை இருக்கும் இடத்தை அறிய முடியுமாம். இதுதான் இதன் சிறபம்சம். இந்த ஆப் மூலம் இதுவரை 100க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

உப்புநீர் ஏரி

ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா நதிதான் மிகப் பெரியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago