முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

நிம்மதி பெருமூச்சு

தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் தனியாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் சூழலில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, ஜனவரி 18-ம் தேதி முதல் விமானங்களில் "எக்கனாமி வகுப்பில் 3-வது வரிசையிலிருக்கும் 6 இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நட்சத்திரம் அருகில்

இந்த மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தின் சிறப்பு என்ன தெரியுமா.. இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடைய ஓடும் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் காந்தி நகரே முழுமையாக பெண்களை கொண்ட முதல் ரயில் நிலையம். கடந்த 2019 பிப்ரவரி மாத இறுதியில் இது செயலுக்கு வந்ததுடன் 40க்கும் மேலான பெண் ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago