முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

இயற்கை முறையில்

நெதர்லாந்தில் குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைத்து உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் தேவையில்லை. இதில் சேமிக்கப்படும் உணவை உண்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம .

வெயிலை சேமிக்கும் கருவி

குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். உண்மைதான். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தை சேமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின்போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டு சுற்றிலும் பரவும்.

பூமிக்கும் வந்து விட்டது கருப்பு பெட்டி

அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள  இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

43 நாடுகளில் மன்னராட்சி

ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில் உலகில் சில நாடுகள் இன்னும் மன்னராட்சியின் கீழ் தான் உள்ளன. அவ்வாறு உலகில் மொத்தம் 43 நாடுகள் இன்றைக்கும் மன்னராட்சியின் கீழ் உள்ளன. அவற்றில் ஜப்பான், ஸ்பெயின், சுவிஸ், பூடான், தாய்லாந்து, மொனாகோ, சுவீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 43 நாடுகளை உலகில் உள்ள 28 அரச குடும்பங்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago