அமெரிக்காவின் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆக்டோபஸ் என்ற உயிரனத்தை நாம் அறிவோம். ஆனால் அதன் உடலில் சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது. ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது. மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது. அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.
உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான 'வெரிலி' உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், உலகில் உள்ள மொத்த குப்பைகளில் 30 சதவீதத்தை அவர்களே உற்பத்தி செய்கின்றனர். உலகில் அதிகமாக காகிதத்தை பயன்படுத்துவதில் அமெரிக்க தனியார் நிறுவனங்களே இன்றும் முன்னணியில் உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு நொடிக்கும் 10 ஆயிரம் காலன் எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் 2,20 லட்சம் பவுன்ட் எடை அளவுக்கு கார்பனை வெளியிடுகின்றனர். அமெரிக்க நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு 25 டிரில்லியன் பிளாஸ்டிக் கப்கள் வீசி யெறியப்படுகின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அமெரிக்கர்கள் 25 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசியெறிகின்றனர். உலகிலேயே ஆண்டுதோறும் அதிகமான மரங்கள் அமெரிக்காவிலேயே வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் அமெரிக்கர்கள் வீசும் அலுமினிய குப்பைகளை கொண்டு தேசத்துக்கு தேவையான வர்த்தக விமானத்தையே உருவாக்கி விடலாம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.
ரயிலில் மஞ்சள் நிற கோடுகள் கோணல் கோணலாக வரையப்பட்டிருக்கும். இது எதற்காக என்று யோசித்தது உண்டா? இந்த கோடுகள் ரயிலில் எல்லா இடத்திலும் குறியிடப்பட்டிருக்காது. இவை ரயிலின் கடைசி ஜன்னலுக்கு மேல் தான் குறியிடப்பட்டிருக்கும். இவை எதற்காக என்றால், இந்த மஞ்சள் நிற கோடுகள் இருந்தால், அவை முன்பதிவு செய்யப்படாத பெட்டி என்று அர்த்தம். மற்றவை எல்லாம் முன்பதிவு செய்யப்பட்ட ஒன்று. பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை தெரிந்துகொள்ளவே இந்த குறியீடு. முன் பதிவு செய்யாத பெட்டிகள் நம்மூர்களில் மத்திய பகுதியிலும் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றிலும் இந்த மஞ்சள் நிற சாய் கோடுகளை காணலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


