முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கூடும் நேரம்

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

உலகிலேயே மிகப்பெரிய பூரான் இங்கிாலந்தில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள Northumberland மலைப்பகுதியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வரலாற்றில் இது வரையில் இல்லாத வகையில் உலகிலேயே மிகப் பெரிய சைஸிலான பூரான் இன ஊர்வன பூச்சியை கண்டு பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு கார் சைஸூக்கு மிகப் பெரியதாக இருந்துள்ளது. சுமார் 2.7 மீட்டர் நீளமும், 50 கிலோ எடையும் கொண்டதாக அது இருந்தது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். உயிர் படிமமாக கிடைத்துள்ள அந்த பூச்சி சுமார் 326 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடித்த நாசா!

நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன் 1 செயற்கைக்கோளை, 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் அனுப்பட்ட பின் ஓராண்டு காலமாக நிலவைப் பற்றிய பல தகவல்களை கண்டறிந்து, இஸ்ரோவிற்கு அனுப்பியது. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1-இன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திராயன் 1 தொலைந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் சந்திராயன் 1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது தெரிவித்துள்ளது.

நீந்தி திரியும் வண்ண மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடும் உணவகம்

கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்ன மக்களே.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் நிழலை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் அந்த நிழல் பகுதியில் பனி குவிகிறது. அதில் சூரிய ஒளி படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது. அதன் விரிவான ஆய்வுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ் 128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக மாறுகிறது. இது ஒரு நாளில் சில மணி நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய மாறுதலாகும். ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும். பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது என்கிறது அந்த அறிக்கை. ஆச்சரியமாக உள்ளதல்லவா...

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago