முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கேமரா

இங்கிலாந்தில் விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கேமராவை கண்டுபிடித்துள்ளது. ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இல்லை.

இதயம் அறிவோம்

அரை கிலோ கிராமுக்கு எடை குறைவான உறுப்புதான் இதயம். இதன் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, இதய தசைகளுக்கு ரத்தம் கிடைக்காததனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவே, இதற்கு பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாப்பதால்தான்.

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

அடிக்கடி தக்காளி ...

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். மேலும், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.

பறவைகளைப்போல வலசை செல்லும் விலங்குகள் எது தெரியுமா?

பருவ காலத்தின் போது இனப்பெருக்கத்துக்காகவோ, இரை தேடியோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை வலசைக்கு போதல் என்று குறிப்பிடுகின்றனர். அதென்ன பறவைகள் மட்டும்தான் வலசை செல்லுமா, விலங்குகள், பூச்சிகள் செல்வதில்லையா என்று கேட்டால்... ஆம்.. அவற்றிலும் சில இது போல வலசை செல்கின்றன. சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை இரை மற்றும் இனப் பெருக்கத்துக்காக வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago