முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல்

விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை, மலையளவு குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள். இவை இரண்டுக்கும் ஒரு சேர தீர்வு கண்டுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர். டில்லி இந்தியன் ஸ்டேட்டஸ்டிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் 8 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களை பிரித்தெடுத்துகும் முறையை கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு காப்புரிமையை பெற்றனர். அவர்கள் பீகார் மாநிலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். கிராவிட்டில் அக்ரோ மற்றும் எனர்ஜி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலையை அவர்கள் வங்கி கடனாக பெறப்பட்ட ரூ25 லட்சம் பணத்தை கொண்டு துவங்கியுள்ளனர். இந்த ஆலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மொத்தம 175 லிட்டர் பயோ  பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.62 செலவில் இந்த பயோ-பெட்ரோல்-டீசல் தயாராகிறது. இதை அவர்கள் ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர்.

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படங்களுக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. முதன்முதலில் 1929 இல் மே 16 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே விருதில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூடி முத்திரையிடப்ப்டு சீல் வைக்கப்பட்ட கவரில் வெற்றி பெறுபவரின் பெயரை அறிவிக்கும் வழக்கம் 1941 இல் தான் தொடங்கியது. 1940க்கு முன்பு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெற்றியாளர்களை அதன் மாலை பதிப்பில் முந்தைய நாளே அறிவித்துவிடுவதன் காரணமாகவே, 1941 இல் முத்திரையிடப்பட்ட கவர் முறை தொடங்கியது.

ஹாலிவுட் சினிமாக்களில் கழிவறை

இன்றைய ஹாலிவுட் படமானாலும் சரி, வெளிநாட்டு படமானாலும் ஒரு சீன்லயாவது கழிவறை இடம் பெறாமல் போவதில்லை. ஆனால் 1960கள் வரையிலும் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் கழிவறையே இடம் பெற்றதில்லை. முதன்முதலாக முக்கிய பாத்திரம் ஒருவர் கழிவறையில் காகிதத்தை கசக்கி எறிந்து, தண்ணீரை திறந்து விடுவதை போன்ற காட்சியை சைக்கோ திரைப்படத்தில் ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அதன் பிறகே ஹாலிவுட் படங்களில், கழிவறை, குளிலறை, ஷவர் போன்றவை இடம் பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

6.6 கோடி ஆண்டுகள் சிதையாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு கண்டுபிடிப்பு

தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்கரு பல் இல்லாத தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அக்கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டு இருக்கிறது. பறவைகளின் முட்டையில்தான் குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும். ஆசியா மற்றும் வட அமெரிக்கா என்றழைக்கப்படும் பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் (10 கோடி முதல் 6.6 கோடி) ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.

3டி பிரிண்டிங் முறையில் கட்டப்பட்ட பள்ளிக் கூடம்

3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் இன்றைக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை உறுப்புகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்து வரும் இந்த தொழில் நுட்பம் தற்போது கட்டுமானத்துறைக்குள்ளும் தனது காலடியை பதித்துள்ளது. முதன் முறையாக 3டி முறையில் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி சாதனை படைத்துள்ளனர். இனி மேல் எந்த இடத்திலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியை கட்டி விடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உலகிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட பள்ளி கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது. ஆப்ரிக்காவில் உள்ள மாலாவியில் இந்த பள்ளி 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கட்டிடப் பொருள்களை தயாரிப்பதில் பிரபலமான பிரிட்டனில் உள்ள நிறுவனமும், சுவிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இதன் மூலம் உடனடியாகவும், தேவையான இடங்களிலும் இது போன்ற கட்டிடங்களை எதிர்காலத்தில் தயாரிக்க முடியும் என அவை தெரிவித்துள்ளன.

காகத்தின் கூட்டில் குயில் முட்டையிடுவது ஏன் ?

மற்றொரு பறவையின் கூட்டில் தனது முட்டைகளை இட்டு, மற்ற பறவைகள் மூலம் தனது சந்ததியை பாதுகாக்கும்  பறவைகளை `பாராசிடிக் பறவைகள்’ என்று அறிவியல் துறையில் அழைக்கின்றனர். அதேபோல, பறவைகளில் இளம் குஞ்சுகளைப் பராமரித்து, வளர்க்கும் வேலையை இன்னொரு பறவையிடம் விட்டுவிடுவனவற்றை Parasitic bird என்றும் அவை சார்ந்து வாழ்கின்ற பறவையை Host bird என்றும் அழைக்கின்றனர். அதற்கு நம் கண்முன்னே இருக்கின்ற சிறந்த உதாரணம் காக்கையும் குயிலும். குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. முட்டையுடைய நிறம் மற்றும் வடிவத்தில், காகத்தின் முட்டையோடு குயிலுடையதும் ஒத்திருக்கும். அதே போல  அக்கா குயில் (common hawk cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், தவிட்டுக் குருவியின் கூட்டில் முட்டையிடும்.சுடலைக் குயில் (pied cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், சின்னான் வகையைச் சேர்ந்த கேப் புல்புல் (cape bulbul) என்ற பறவையின் கூட்டில் முட்டையிடும். ஆனால், அதன் முட்டையும் சின்னானுடைய முட்டையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இருந்தாலும், அதைச் சின்னான் தவிர்க்காமல், அடைகாத்து தன்னுடைய குஞ்சுகளைப் போலவே கவனித்துக் கொள்கின்றன.இப்படி, தன் இனத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக குயில்கள் காகங்களைச் சார்ந்திருக்கின்றன. அவற்றிடமிருந்து தன் முட்டைகளைக் காப்பாற்ற, காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன. இரண்டின் போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்கின்றது. இறுதியில் இரண்டுமே தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago