முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நிறம் மாறும்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயர் (fire) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஹேர் டை தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மை கொண்டது. அடர்சிவப்பு தொடங்கி பல்வேறு நுண்ணிய நிறங்களில் இந்த ஹேர் டை கிடைக்கிறது.

ட்ரோன் ஆம்புலன்ஸ்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.

மாரடைப்பை கண்டறியும்

கார் ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு வந்தால் கண்டறியும் தொழில்நுட்பவசதியை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் வாகன விபத்துகள் தடுக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஆய்வாளர்களுடன் இணைந்து ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். உயர் அழுத்த எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) மற்றும் பல மருத்துவ அளவீடுகளை வைத்து ஓட்டுநரின் மனநிலையை கார் உணரும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கேவ்யன் நஜாரியன் கூறுகிறார். இந்த ஆய்வாளர் குழுவின் சோதனை  2020-ம் ஆண்டு நிறைவு பெறுமாம்.

ஆலமரம் ஆச்சரியம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டம் லண்டி கோட்டல். லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் நூறாண்டுகளுக்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவர்  மரம் தன்னை நோக்கி வந்ததாக கூறியதை அடுத்து இந்த மரத்தை சிறை வைத்தார்களாம்.  இன்றளவும் அந்த மரம் சங்கலிகளால் கட்டுப்பட்டு தான் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில், இந்த மரத்தை ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம்.

இங்கிலாந்து பவுண்ட்ஸ்

இங்கிலாந்து வங்கி திங்களன்று ஒரு ட்வீட் மூலம் புதிய 5 பவுண்டு நோட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat) இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.இதை தொடர்ந்து சைவ உணவு உண்பவர்கள் பெரும் காட்டம் அடைந்துள்ளனர். அந்த நோட்டுகளை நீக்க வேண்டும் என ஒரு மனுவில் இது வரை சுமார் 19,000 பேர் கையெழுத்திட்டு வங்கியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

3-டி பிரிண்ட் பாலம்

உலகில் முதன்முதலாக நெதர்லாந்தில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்