முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் அதிபர்

நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு அதிபர் கிடைப்பார் என ராபர்ட். எப். கென்னடி கூறியது போல, ஒபாமா அதிபரானார். இவர், ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்தவர்.  2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் இவர் தான்.

VoIP

நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும்  WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி பேசலாம்.  எப்படி தெரியுமா... நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே.  ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.  VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம். 

ஸ்மார்ட் ரெயில் !

சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது. ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது. தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வசதி

ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்பில், சேவ் யுவர் பார்க்கிங் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை பதிவு செய்து கொள்ளலாம். கார் நிறுத்தம் குறித்த கூடுதல் தகவல்களையும் இதில் சேர்க்கலாம் என கூகுள் நிறுவனம், தெரிவித்துள்ளது. கார் நிறுத்த தகவல்களையும் இடத்தையும் புகைப்படமாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

வெள்ளை காண்டா மிருகத்துக்கு ஆயுத பாதுகாப்பு

உலகின் கடைசி வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர். இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க, இந்த இனப்பெருக்கத் திட்டம் நடத்தப்பட்டது. வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் விலங்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போனது.ஆனால் அதன் விந்தணு சேகரிக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இறந்த இரு ஆண் காண்டாமிருகத்திலிருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்தணு மற்றும் பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை முறையில் கருதரிக்கச் செய்கிறார்கள். வெள்ளை காண்டாமிருகங்கள் வேட்டை மற்றும் வாழ்விட இழப்பின் காரணமாக அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.நாஜின் என்று பெயரிடப்பட்டுள்ள வெள்ளை பெண் காண்டாமிருகம் செக் நாட்டில் ஒரு வன விலங்கு பூங்காவில் பிறந்தது. பத்தாண்டு காலத்துக்குப் பிறகு கென்யாவில் உள்ள ஒல் பெஜெடா வன விலங்கு பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு அதற்கு பலத்த ஆயுத பாதுகாப்புக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனை பார்க்கும் அதிசய முதியவர்

உத்தரபிரதே மாநிலத்தைச் சேர்ந்தவர் 70 வயதான எம்எஸ் வர்மா. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். இடைவிடாமல, கண்களை கொஞ்சம் கூட இமைக்காமல் சூரியனை 1 மணி நேரம் பார்க்கும் திறமை படைத்தவர். நமக்கெல்லாம் வெளிச்சத்தை சிறிது நேரம் உற்று பார்த்தாலே கண்கள் இருட்டி விடும். மனுசன் சூரியனை விடாமல் பார்ப்பாராம். இதற்காக சுமார் 25 ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார். ஆன்மிக குரு ஒருவரின் மீதான தாக்கம் காரணமாக அவர் கண்களை இதற்கு பழக்கிக் கொண்டதாக தெரிகிறது. சாதனையை கூலாக முடித்துக் கொண்டு ஹாயாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்