முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாகனங்களை இழுக்கும் அதிசய காந்த மலை

பொதுவாக இறக்கமான இடங்களில் புவியீர்ப்பு விசையால் வாகனங்கள் கீழ் நோக்கி செல்வதுதான் வழக்கம். ஆனால் முற்றிலும் அதிசயதக்க வகையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாகனங்களை மேல் பகுதியை நோக்கி இழுக்கிறது. இதனாலேயே இது காந்தமலை என அழைக்கப்படுகிறது. லடாக் பிராந்தியத்துக்கும் லே என்ற சுற்றுலா தளத்துக்கும் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த காந்தமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இந்த காந்தமலை அமைந்துள்ளது. எந்த ஓர் ஊர்தியையும் நியூட்ரல் கியரில் நிறுத்தினால் ஊர்தி காந்தமலை இருக்கும் திசைநோக்கி தானாக நகர்கிறது. அது ஆச்சரியம் தானே..

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம்

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

ராபர்ட் கிளைவ் திருமணம் எங்கு நடந்தது தெரியுமா?

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார்.  அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.

நோக்கியா ரீட்டர்ன்ஸ்

நோக்கியா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் மூலம் 2017-ல் மீண்டும் மறுபிரவேசம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும்.

எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க சைக்கிளிங் சிறந்த பயிற்சி. தினமும் காலை, மாலை என இரு வேளைகள் சைக்கிளிங்கில் செல்லலாம். மேலும், வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சைக்கிள்களில் செல்லுதல், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நீண்டதூரம் சைக்கிள் பயணம் போன்றவை மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மேலும் உடல் பருமனையும் குறைக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்