முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வானில் அதிசயம்

சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகில் உள்ள குயிர்பெர் மண்டலத்தில், 1,500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, குள்ளமான கிரகம் ஒன்று உள்ளது. இதற்கு ‘2007 OR10’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த குள்ள கிரகத்தில் 400 கிலோமீட்டர் பரப்பளவில் நிலா ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூக்கை பிடித்துக் கொண்டு நம்மால் 'ஹம்' செய்ய முடியுமா?

பலரை நாம் பார்த்திருக்கலாம். எப்போதும் ஏதேனும் ஒரு மெட்டை வாயால் ஹம் செய்து கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ ஹம் செய்தபடியே வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ...உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். அதாவது மூக்கை விரல்களால் இறுக்கமாக மூடிக் கொண்டு நம்மால் ஹம் செய்ய முடியாது. வேண்டுமானால் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

ஏப்.1 ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளவர்கள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அப்போது சின்ன ஏமாற்றுகள், நகைச்சுவைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கம் எப்போதிருந்து தொடங்கியது. 1381-ல் இங்கிலாந்து அரசர் 2-வது ரிச்சர்டுக்கும், ராணி பொகிமியாவின் ஆனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 32-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டதும் மக்கள் அதை கொண்டாட தயாராகினர். அப்போதுதான் இடையிலேயே மார்ச்சில் 32 தேதி இல்லையே என தெரிய வந்தது. உடனே கொண்டாடத்தை நிறுத்தினர். அதுவே பின்னர் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மற்றொரு காரணம் 1582-ல் பிரான்சில் பயன்பாட்டில் இருந்த பழைய காலண்டரை நீக்கி விட்டு சார்லஸ் போப் புதிய ரோமானிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இருந்த போதிலும் பலரும் பழைய காலண்டரையே பயன்படுத்தினர். இதை குறிப்பிடும் வகையிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, 19-ம் நூற்றாண்டிலிருந்து இது தொடங்கியது.

ஆடம்பரத்தின் உச்சம்

இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மானுக்காக, சொகுசு கார் உட்பட இவருக்கு தேவையான 460 டன் சாதனங்கள்  சவுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு பயன்படுத்தப்பட்டதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் டெக்ஸ்டைல் கழிவு எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் வாழும் தனிநபர் சுமார் 40 கிலோ எடையுள்ள டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 11 மில்லியன் டன் அளவுக்கு டெக்ஸ்டைல் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவை அனைத்தும் நிலத்தில் பரவி அதை விஷத்தன்மை உள்ளதாக ஆக்குகின்றன. காற்றில் பரவி காற்று மாசை ஏற்படுத்துகிறது. புவி வெப்பமயதாலுக்கு முதன்மை காரணி இது போன்று வெளியேற்றப்படும் கழிவுகள்தான் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இயற்பியலில் 2 முறை நோபல் பரிசு பெற்றவர் யார் தெரியுமா?

ஜான் பர்தீன் என்பவர் தான் இயற்பியலில் 2 முறை நோபல் பரிசு பெற்றார். முதன் முறையாக 1956 இலும், அதன் பிறகு 1972 இலும் அவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முறையாக டிரான்ஸ்சிஸ்டர் குறித்த கண்ட பிடிப்புக்கும், சூப்பர் கன்டக்டிவிட்டி குறித்த ஆய்வுக்கும் அவருக்கு இரண்டு முறை நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. அவரது டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிப்பு மூலம் தான் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஒரு மிகப் பெரிய புரட்சியே ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago