முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவு

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரிய ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். குறிப்பாக சூரியனை தவிர மற்ற எந்த கோள்களுக்கும் சுயமாக பிரகாசிக்கும் தன்மை கிடையாது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சூரிய ஒளியை பூமி பிரதிபலிக்கும் தன்மை சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள பிக் பியர் சோலார் அப்சரவேட்டரி ஆய்வகத்தைச் சேர்ந்த பிலிப் கூடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கடந்த 1998 முதல் 2017 வரையிலான பூமியின் பிரதிபலிப்பு திறன் குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வு செய்ததில் பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவிக்கின்றனர். அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் தான் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாகவும் அவர்களது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் ஜாக்கிரதை

இந்தியாவில் நுகர்வோர்கள் பயன்படுத்தும் பேமண்ட் ஆப்ஸ்கள் அனைத்தும் முழுமையான பாதுகாப்பு கொண்டவைகள், ஆனால், பாதுகாப்பான மொபைல் பேமண்ட் ஆப்ஸ்கள் கிடையாதாம். மொபைல் பேமண்ட் சேவைகளில் பயனர் தரவு பாதுகாக்கும் மென்பொருள் நிலை பாதுகாப்பு மட்டுமே உள்ளது, வன்பொருள் அடிப்படையிலான குறியாக்கம் கிடையாது. ஆக அது பயனர் உள்நுழைவு விவரங்கள் மற்றும் தரவு ஆகியவைகளை அணுக அனுமதிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

மின்னல் மனிதனுக்கு முதுகெலும்பு பாதிப்பு இருந்தது தெரியுமா?

உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட்.  அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.

சிறந்த நகரம்

உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

சூப்பர் பைக்

பி.எம்.டபிள்யூ ‘விஷன் நெக்ஸ்ட் 100’ என்ற புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது. இதை இயக்குபவருக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் இடையிலான தகவல் பறிமாற்றத்துக்காக வியூபைண்டர் கண் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேகம், ஆர்பிஎம் தகவல்களை அறியலாம்.

முகம் ஜொலிக்க

ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago