முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சமோசா விற்க ...

மகாராஷ்டிராவை சேர்ந்த முனாப் கபாடியா, தனது தாயார் நபிசா செய்யும் மட்டன் சமோசா மற்றும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உணவகம் ஒன்றை மும்பையில் திறந்தார். தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

செயற்கையாக மழை

சீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்ட குடிநீர் தட்டுபாட்டை போக்க செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் இந்த திட்டத்திற்கு  சுமார் 17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாக்லேட்டின் தாயகம்

கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் பொருள் ஓர் உணவாகப் பரவியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் இது ஸ்பெயினில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது என பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உடலுக்கு தீங்கற்றது என அரசு சான்றளித்த பிறகே 1650 இல் மக்கள் பானமாக மாறியது. பின்னர் பிரெஞ்சுக்காரர் அதை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். 18 ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்துக்குள் நுழைகிறது சாக்லேட். சுவிஸ் நாட்டு கெய்லர் சாக்லேட்டை கட்டிகளாக மாற்றி பரவ செய்தார். காட்பரி சகோதரர்களான புரோஜான் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் விதவிதமான மூலப்பொருட்கள் கலவையுடன் சுவையான சாக்லேட் பண்டங்களை உருவாக்கினர்.கோஹன்ரிட் ஜே. வான் ஹட்டன் என்ற டச்சு நாட்டு வேதியியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டில் சாக்லேட் திரவத்தை, சாக்லேட் தூளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பச் செயல் முறையைக் கண்டுபிடித்தார். இக்கோட்பாட்டின் அடிப்படையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் பீட்டர் என்பவர் பால் சாக்லேட்டைத் தயாரிக்கத் துவங்கினார்.தற்போது இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வகை வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. 2 ஆம் உலகப் போரின் போது வீரர்களுக்காக விதவிதமான சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டன

காற்றே எரிபொருள்

அழுத்தப்பட்ட காற்றினை எரிசக்தியாகக் கொண்டு இயங்கும் காரினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏர்பேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்கள் மணிக்கு 65 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லும். இந்த காரில், 200 கி.மீ. தூரம் பயணிக்க ரூ.70 மட்டுமே செலவாகும் என்பது சிறப்பம்சம்.

பிரிட்டன் ராணி எலிசபெத்தை விட பணக்கார இந்திய பெண்

இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரி‌ஷி சுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட பணக்காரராக திகழ்கிறார். ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறத்தாழ 460 மில்லியன் அமெரிக்க டாலர். தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர். இதைத் தவிர, லண்டனின் கென்சிங்டனில் உள்ள 9 மில்லியன் டாலர் மதிப்புடைய வீடு, கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உட்பட குறைந்தது நான்கு சொத்துகளை வைத்துள்ளார்.

சந்திரனில் கிராமம்

ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் உள்ள 22 உறுப்பு நாடுகள் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சியில் இரங்கியுள்ளதாம். சேஞ்ச்-5 என்ற விண்கலத்தை அங்கு அனுப்பி மண், பாறை போன்றவற்றை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago