முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொசுக்களை அழிக்க

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான 'வெரிலி' உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தலையால் கூட்டின் கதவை அடைக்கும் வித்தியாச எறும்புகள்

எறும்புகள் ஒருவகையில் தேனீக்களைப் போன்றவை. தேனீக்களை போலவே ராணி, ஆண், வேலைக்கார எறும்புகள் போன்ற வகைகளில் இவற்றிலும் உண்டு. அதில் ஒரு சில இனங்களில் வித்தியாசமான எறும்புகள் உள்ளன. அவை தங்களது தலையால் கூட்டின் வாயிலை கதவு போல அடைத்துக் கொள்கின்றன. இதனால் இவற்றுக்கு கதவு தலை எறும்புகள் (door head ants) என்றே பெயர் கொண்டவை. இவற்றை தாண்டிதான் அன்னியர்கள் உள்ளே வர முடியும். பெரும்பாலும் அன்னியர்களுக்கு அனுமதி கிடையாது. தங்களது இனத்திலேயே கதவு தலை எறும்புகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே கூட்டுக்குள் என்ட்ரியாக முடியும்.. எப்படி ஒரு அதிசயம் பாருங்கள்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

இரத்தஓட்டம் சீரடைய

தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.

உப்பை குறைத்தால்...

நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் (உப்பு) உடலில் கலக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்