முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தமிழ் கல்வெட்டு, Tamil inscription

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் மங்கோலிய பேரரசரான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் உள்ள இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீன பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் பேரரசனான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலிய பேரரசர்கள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

விலை ரூ.65 லட்சம்

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம். இந்த பாட்டிலில் நிரப்பப்படும் தண்ணீர் தெற்கு கலிபோர்னியானியாவின் மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறதாம். இந்த தண்ணீர்தான் உலகின் சுத்தமான நீராக கருதப்படுகிறது. இந்த தண்ணீர் அதிக சுவையானதாகவும், மென்மையானதாகவும், நம்பமுடியாத அளவு மிருதுவானதாகவும் உள்ளது.  மேலும், இந்த குடிநீர் பாட்டிலின் மூடியில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும் 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் இதோடு மலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவருடத்துக்கான தண்ணீரும் இந்த  பாட்டிலை வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறதாம்.

117-ல் மரணம்

1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த இத்தாலியைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்டு வந்த எம்மா மொரானோ காலமானார். அவருக்கு வயது 117.  21-வது நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர், 19-வது நூற்றாண்டில் பிறந்து உயிருடன் வாழ்ந்த கடைசி நபர் என்ற பெருமையை பெற்றவர்.

புதிய முயற்சி

முன்பு சல்பர் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்த நிலையில், கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

சாதனைக்கு தடை

கியூபா நாட்டைச் சேர்ந்தவர் ஃபெலிக்ஸ் குய்ரோலா. இவர், 24.6 அடி உயரம் கொண்ட சைக்கிள் ஒன்றில் பயணம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்தார். இந்த சாதனை நிகழ்த்துவதற்கு அவர் முறையான அனுமதி பெறததால் அவரது சாதனைக் கனவை நிறைவேற்றாமல் போயிற்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago