முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

மருதாணி

நகங்களின் மேல் சிறிது அளவு டூத்பேஸ்ட்டை தடவி காய விடுங்கள். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பிறகு தேய்த்து எடுத்தால், நகங்களின் மீது உள்ள மருதாணி கறைகள் முழுமையாக நீங்கி விடும். ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு கலந்து கொள்ளுங்கள். அவை இரண்டும் சமமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கலவையை ஒரு பருத்தித் துணியால் எடுத்து உங்களின் நகங்களின் மீது தேய்த்தால் மருதாணி கறை போயே போச்... இட்ஸ் கான்.

இந்தியா தயாரித்த முதல் ராக்கெட்

அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட  ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

புதிய தொழில்நுட்பம்

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago