முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சின்ட்ரோம் கே என்ற உயிர் காக்கும் நோய் குறித்து உங்களுக்கு தெரியுமா?

தற்போது கோவிட் - 19 என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உருப்பெற்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோர் இதற்கு பலியாயினர். உயிரை காப்பாற்றிய சின்ட்ரோம் கே நோய் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் யூதர்களை கொத்து கொத்தாக குறிவைத்து கொலை செய்தனர். அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக சின்ட்ரோம் கே என்ற போலியான நோய் ஒன்று இருப்பதாக இத்தாலி டாக்டர்கள் பரப்பினர். இதன் மூலம் மருத்துவமனைக்கு வந்த யூதர்களை அவர்கள் நாஸிக்களிடமிருந்து காப்பாற்றினர். இதனால் யூதர்களை அங்கு தனிமைப்படுத்தி டாக்டர்கள் பாதுகாத்தனர். அவர்களை தொடர்பு கொண்டால் அந்த கொடிய நோயால் நாமும் மரணித்து விடுவோம் என உண்மையாகவே நாஸிக்கள் அஞ்சி யூதர்களை நெருங்கவில்லை.

புதிய தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட்வாட்ச்சை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 2.0 தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கைகடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும்.

கண்ணும் கருத்துமாக

கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும். மேலும், நீர் வடிந்தால் கண்கள் சோர்வடைந்துள்ளது என அர்த்தம்.

ரூ.500 கோடிக்கு விற்பனையான டிஜிட்டல் ஓவியம்

அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் ஆர்ட்டிஸ்டான Mike Winkelmann முழுக்க முழுக்க கணிணி மூலம் வரைந்த டிஜிட்டல் ஓவியம் முதன் முறையாக அதிகபட்ச விலைக்கு 69.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது வரை கைகளால் வரையப்பட்ட ஓவியம் தான் அதிக விற்பனையாகி வந்த நிலையில இவரது டிஜிட்டல் ஓவியம் அந்த சாதனையை படைத்துள்ளது. இனி வரும் காலத்தில் டிஜிட்டல் ஓவியங்கள் புதிய சந்தையை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்

நாசா திட்டம்

பூமியின் வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் குறைந்த அளவில் கார் பன்டை ஆக்சைடு உள்ளிட்டவைகள் உள்ளன. ஆனால் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு உள்ளது. எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்பும் போது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VoIP

நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும்  WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி பேசலாம்.  எப்படி தெரியுமா... நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே.  ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.  VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்