முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அழகை மேம்படுத்தும்

பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.

தனிநபரின் பெயர்

அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.

30 ஆண்டுகளாக...

அமெரிக்காவை சேர்ந்த கார்ல் பாடன் (64) என்பவர் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார். முதலில் சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.

நிறம் மாறிய பூக்கள்

கால நிலை மாற்றத்தால் பூக்களின் நிறங்களும் மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்காக நீங்கள் பரிசளிக்கும் ரோஜாவின் நிறம் ஒரே இரவில் மாறிவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கால நிலை மாற்றத்தால் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக புற ஊதா கதிர்களின் வீச்சு காரணமாக இது போன்ற மாற்றங்கள் தாவரங்ளில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கடந்த 2020இல் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள கிளம்சன் பல்கலை நடத்திய ஆய்வில் புற ஊதா கதிர்கள் பூக்களின் வண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவ்வாறு ஏற்பட்டுள்ள வண்ண மாற்றத்தை நமது வெறும் கண்களால் உணர முடியாது. ஆனால் அதே நேரத்தில் மகரந்த சேர்க்கைக்காக ஈர்க்கப்படும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது என்பதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.

இயந்திர மனித போலீஸ்

சீனாவில் ஹெனான் உள்ள லேங்க்லோ கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு  இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. முதல் நாளே அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்தது அந்த இயந்திர மனிதன். 1.6 மீட்டர் உயரமான இந்த இயந்திர மனித போலீஸ், குற்றவாளிகளையும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் முகத்தை வைத்து அடையாளம் காணும். தற்போது செங்ச்சாவ் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் அந்த எந்திரன் போலீஸ், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் அவர்களது அடையாள அட்டை கொண்டு சரியாக அடையாளம் காண்கிறதாம்.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago