முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோடையில் 15 செமீ உயரம் வளரும் ஈபில் கோபுரம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் அமைந்திருக்கும் மிகப் பெரிய ஈபில் கோபுரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 18 ஆயிரம் எஃகு துண்டுகளை 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைத்து இந்த 324 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரத்ைத அமைத்தனர். இது உலக அதிசயங்களில் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் இந்த கோபுரம் 15 செமீ கூடுதலாக வளர்ந்து விடும் என்றால் ஆச்சரியம் தானே.. ஏன் என்கிறீர்களா, இது முழுக்க முழுக்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் எஃகு விரிவடைந்து ஒட்டுமொத்தமாக இதன் உயரமும் அதிகரித்து விடுகிறது. விரிவடையும் போது பாதிக்கப்படாத வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

நட்சத்திரம் புதிது

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நடத்திய ஆய்வில் நட்சத்திரம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர். கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பார்லி வலிமை

கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதுமான பார்லி அரிசி  காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. வயது முதிர்வை தடுத்து இளமையை தக்க வைக்கும் மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது பெருங்குடல் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக விளங்குகிறது.

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

வேறு மொழி.

ஒருவர் பேசும் போது குரலின் ஒலியை வைத்து பேசுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கூறிவிட முடியும். ஆனால் ஒருவர் பேசிய மொழியை வைத்து இதை பேசியவர் ஆணா, பெண்ணா எனக் கூற முடியுமா.. ஆனால் அப்படி ஒரு விநோதமான இடம் நைஜிரீயாவில்  உள்ளது. இங்குள்ள சிறுவர்களும் சிறுமிகளும் ஒரே இடத்தில் வளர்ந்தாலும் இரு வேறு பாஷையையே பேசுகின்றனர். நைஜிரீயாவில் உள்ள உபாங் என்ற கிராமம் தான் அந்த அதிசய மொழி பேசும் கிராமம். எனவே சொற்களை கொண்டே இதை பேசியது ஆணா, பெண்ணா என்பதை சொல்லிவிடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உதாரணமாக தண்ணீரை ஆண்கள் பாமுயி என்றால் பெண்கள் அமு என்கின்றனர். இந்த மரபு எப்போதிலிருந்து தொடங்கியது என யாருக்கும் தெரியவில்லை. எனவே ஆண்களின் முன்னால் பெண்கள் தைரியமாக ரகசியங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்... மாறி வரும் காலச்சூழலில் ஆங்கில கலப்பால் உபாங் மொழி அழியும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago