முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரோபோ கார்கள்

துபாய் காவல்துறையில், குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் வகையிலான பேஷியல் ரெகாக்னிஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி ரோபோ கார்கள் இணைக்கப்பட உள்ளது. ஓ-ஆர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ கார்கள், வெப்பம் அதிகமுள்ள சூழலிலும் படம் பிடிக்கும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் கொண்டது.

மோப்ப சக்தி

நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற கருத்து உள்ளது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா என்பவர் வெளியிட்ட கட்டுரையில் விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்திருந்தது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.

விரைவில் அறிமுகம்

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

சூப்பர் பைக்

பி.எம்.டபிள்யூ ‘விஷன் நெக்ஸ்ட் 100’ என்ற புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது. இதை இயக்குபவருக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் இடையிலான தகவல் பறிமாற்றத்துக்காக வியூபைண்டர் கண் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேகம், ஆர்பிஎம் தகவல்களை அறியலாம்.

வேடிக்கை பெண்

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாண்டா ஃபே ரயில் நிலையத்தின் மீது 2011 முதல் காதல் வயபட்டார். ’கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரயில்வே ஸ்டேஷனை திருமணம் செய்து கொண்டேன்’ என்று  கரோல் தற்போது கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தீவில் அணிவகுத்து நிற்கும் மோவாய் சிற்பங்கள்

உலகம் முழுவதும் வரலாற்றில் கண்டறிய முடியாத ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய் சிற்பங்கள். இவை கிபி 1250 முதல் 1500 கால கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ராபா நூய் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த கல் சிற்பங்கள் சுமார் 10 மீ உயரம் கொண்டவை. சுமார் 900 சிலைகள் அணிவகுப்பாக அங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை எதற்காக நிறுவப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது. அதே போல, இத்தனை பெரிய சிலைகளை அக்காலத்தில் எவ்வாறு அந்த மக்கள் கொண்டு வந்து நிறுவினர் என்பதும் இன்று வரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்றாகவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago