Idhayam Matrimony

ஈரோட்டில் இலவச சித்த மருத்துவ முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ஈரோடு
Image Unavailable

24.12.2016 ந் தேதி முதல் கொங்கு கலையரங்கில் இலவச சித்த மருத்துவ முகாமில் நலவாழ்விற்கு பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மூலிகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. 25.12.2016ந் தேதி நிகழ்வாக உண்ணும் உணவே மருந்து என்பதை வழியுறுத்தும் பொருட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. பி சிவசக்தி மற்றும் ஈ.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்க தலைவர் சி.முத்துசாமி தலைமை தாங்கினார். செயலாளர்.ஆர். நல்லசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். கொங்கு தொழிற்நுட்ப கல்லூரி அறக்கட்டளையின் பொருளாளர் கே.கிருஷ்ணன் கருத்தரங்கினை துவக்கி வைத்தார். இயற்கை உணவியல் ஆலோசகர் நித்தியாதேவி சதாசிவம்  வரகு, திணை, சோளம், குதிரை வாலி, கம்பு போன்ற சிறுதானியங்களின் முழுப்பயன் என்ன என்பது பற்றி விளக்கமாக எடுத்துயுரைத்தார். முகாமில் உடல் ஆரோக்கியத்திற்கு வீட்டிலேயே திணை இனிப்பு புட்டு, வரகு பிஸ்கட் (காரம்), சாமை களி, சோத்துக்கத்தாழை மோர், சோள சாதம்-கொள்ளு சட்னி, வெண்டைக்காய் சூப் போன்றவைகளை தயாரித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.  

 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க பொருளாளர்பி திருமலை  ஆர் வேலுச்சாமி,ஆர் சின்னச்சாமி,ஏ கொளந்தைவேலு,கே கொளந்தசாமி,ஆர்.  சுப்பிரமணியம், கொங்குஎன் .கொளந்தசாமி,சி.எம் மூர்த்தி, பிசண்முகநதி, ஆகியோர் சிறப்பாக செய்தனர். இவ்விழாவில் பிரிமியர் கே. முத்துசாமி, .கேபூசப்பன், ஏசின்னத்தம்பி, எஸ்.வி சாந்தமூர்த்தி,டி சாமிநாதன்,           பி.எஸ்.தமிழ்செல்வன், சண்முகம்ஈரோடு ஸ்பேர்ட்ஸ்டிரஸ்ட்  செயலாளர் சி.சிதம்பரம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago