பெண்ணின் மூக்கில் புகுந்து மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சி: ஸ்டான்லி மருத்துவர்கள் அகற்றி சாதனை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      சென்னை

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின் மூக்கில் புகுந்து மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சியை ஸ்டான்லி மருத்துவர்கள் அகற்றி சாதனை செய்துள்ளனர்.

 

சென்னை ஈஞ்சம்பாக்கம் கவுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி செல்வி (வயது42). இவர் கடந்த 31-ந்தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரது மூக்கு வழியாக ஏதோ புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மூக்கின் உற்புறத்திலும் தலையின் உள்புறத்திலும் பயங்கர குடைச்சல் மற்றும் வலி ஏற்பட்டது.உடனடியாக அவர் நள்ளிரவே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர்கள் பரிசோதித்து விட்டு மூக்குக்குள் ஏதாவது சதை வளர்ந்திருக்கும் என்று கூறி மருந்து கொடுத்து அனுப்பினர். வீட்டுக்கு வந்த செல்விக்கு அந்த மருந்தை சாப்பிட்ட பிறகும் வலி குறையவில்லை.இதனால் சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மூளைக்கு அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுபிடித்தனர். இதைக் கேட்டதும் செல்வி அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தூங்கிக் கொண்டிருந்த போது மூக்கின் வலது துவாரம் வழியாக கரப்பான் பூச்சி புகுந்து மூளையின் அடிப்பகுதி வரை சென்றிருப்பது தெரிய வந்தது.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: