முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் 2016-2017-ஆம் கல்வி ஆண்டில் வில்லிவாக்கம் வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.இப்பயிற்சி காரம்பாக்கம்,அயனம்பாக்கம்,கோயில்பதாகை,அரசு பள்ளி அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.இந்த பயிற்சியில் எஸ்.எம்.சி உறுப்பினர்களான தலைமை ஆசிரியர்,எஸ்.எம்.சி தலைவர்,மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் ஆகிய மூன்று நபர்கள் ஒவ்வொரு பள்ளியின் சார்பாக கலந்து கொண்டனர்.பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல்,பள்ளி சுகாதாரம்,பால்,பாலினம் குறித்து பாகுபாடு,இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009,குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நிதி ஆதாரங்களை பயன்படுத்துதல்,உறுப்பினர்களுடைய பங்களிப்பு ஆகியவை செயல்பாடுகளாக அமைத்து உறுப்பினர்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.மேற்கண்ட பயிற்சி மையங்களில் வில்லிவாக்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் லில்லிபுஷ்பம்,எஸ்.எம்.சி உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் வழிகாட்டுதல் குறித்து உரையாற்றினார்.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புனிதவதி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேவநாதன் பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்