விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      விழுப்புரம்
4

விழுப்புரம்.

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக மற்றும் நகர்புற பகுதிளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக கலெக்டர் இல.சுப்பிரமணியன்தலைமையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சனைகள், அவற்றை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்தல், பயன்பாட்டில் இல்லாத குடிநீர் ஆதாரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், குடிநீர் சேமிப்பு சம்மந்தமாக பொதுமக்கள்ளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் பொது இடங்களில் துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய விவரங்கள் குறித்து கலெக்டர் இல.சுப்பிரமணியன், அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் ஊராட்சிகள், உதவி இயக்குநர் பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ), செயல் அலுவலர்கள் (பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஊரகம் மற்றும் நகர்புறம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: