திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் 26 மையங்களில் 6ந் தேதி முதல் விநியோகம்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      திருவண்ணாமலை

ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தேர்வு வரும் ஏப்ரல் 29ந் தேதி ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு முடித்தவர்களுக்கும், 30ந் தேதி பி.எட் பட்டதாரிகளுக்கும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற 6ந் தேதி முதல் 23ந் தேதிவரை வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து வேளை நாட்களிலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து திரும்ப அளிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும் இரு தேர்வுகளை எழுதுவோர் அதற்கான தனித்தனி விண்ணப்பங்களை அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செங்கம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செங்கம், அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சோமாசிப்பாடி, மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம், சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுப்பாளையம், மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரியந்தல் கிருஷ்ணவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை, மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை, சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆரணி, பாலவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆரணி, எஸ்ஆர்ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி, வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி, ஸ்ரீ பாரதமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 26 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது.  எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், செய்யாறு ஆகிய 2 இடங்களில் மட்டுமே அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: