மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை வெளிநாட்டு இந்தியர் இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      புதுச்சேரி

முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-புதுவையில் வறட்சி நிலவும் காரணத்தால் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்த படி வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறுகிய காலத்தில்இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 எம்பிபிஎஸ் சேர்க்கை

எம்பிபிஎஸ் கவுன்சிலிங்இந்த வாரம்தொடங்க உள்ளது. சென்டாக குழு விண்ணப்பங்களை தரம்பிரித்து தகுதி அடிப்படையில் பட்டியலை வெளியிடும் பணிகள் தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசு ஒதுக்கீடு இடங்களை அளித்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீடு இடங்கள்கிடைக்காது. புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 137 இடங்களை கடந்த ஆண்டு பெற்றோம். தற்போது அந்த இடங்களை மத்திய அரசே தகுதியின்அடிப்படையில் நிரப்பும். இதனால் புதுவை 137 இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் சுயநிதி கல்லூரிகள், சிறுபான்மை மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசுக்கு செல்கிறது. எஞ்சிய 85 சதவீதத்தில் மாநில மாணவர்கள் நிர்வாக இடங்களாக கொடுக்கப்படுகிறது.

தட்டிக் கேட்கும் உரிமை

புதுவை மாநிலத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால்இருக்கும் மருத்துவ இடங்கள் குறைவாக உள்ளது. எனவே அரசு மருத்துவ கல்லூரியில் 22 இடங்கள் என்ஆர்ஜ ஒதுக்கிய ஒதுக்கீட்டை புதுவை மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச அரிசு விரைவில்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னருக்கு புதுவையில் எங்கும்செல்ல அதிகாரம் உண்டு. அதனால் தான்  அவரை யாரும்தடுக்க வேண்டாம் என்று சொன்னேன். சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு தெரியாமல் கவர்னர் தொகுதிக்குள் வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் படி தான கூறினேன். ஆனால்விதிமுறைகளுக்கு மாறாக கவர்னரோ, அமைச்சரோ செயல்பட்டால்அதை தட்டிக் கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. அவரவர் அதிகார எல்;லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது லட்சுமி நாராயணன் எம்எல்ஏ உடனிருந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து