முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மிதிவண்டி பேரணி அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்று நடைபெற உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாபெரும் மிதிவண்டி பேரணியை, கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,  தலைமையில்,   சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்   கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 பேரணி

விழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.  இவ்விழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.           அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாபெரும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 1300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .ரா.பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிம்டன்ஜீத் சிங் கஹ்லான், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சிலோ இருதயசாமி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் .மல்லிகா, கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலர் குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து