தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைத்தல் தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுமானப் பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      திருவள்ளூர்
Thiruvallur 2017 12 12

 

திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் () ஈக்காடு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைத்தல் தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுமானப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் .சுந்தரவல்லி துவக்கி வைத்தார்.  

தூய்மை பாரத இயக்கம்

  திருவள்ளுர் மாவட்டத்தை திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற சுகாதார முன்னோடி மாவட்டமாக அமைய வேண்டும் என்பதற்காக தூய்மை பாரத இயக்கம் சார்பாக 526 ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஊராட்சி ஒன்றியங்களி;ல் 321 கிராம ஊராட்சிகளில் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் பிப்ரவரி 2018-க்குள் 205 கிராம ஊராட்சிகள் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்படவுள்ளது.

 இத்தகைய தனிநபர் இல்லக் கழிவறைகள் இம்மாவட்டத்தில் அமைக்கும் பணியில் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் கட்டுமானப் பணியில் ஈடுபட ஆர்வமுள்ள பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான கட்டுமானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறும் பெண்கள் தங்களது கிராம ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டுதல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இதர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர்; தெரிவித்தார்.

இதனைதொடர்ந்துகிளாம்பாக்கம் ஊராட்சியில்தனிநபர் கழிவறைகள் அமைத்தல் தொடர்பாக மகளிர் சுயஉதவி குழுவினருக்கு களப்பணி பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .சா.குமார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் .இராஜகோபாலன், உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி பொறியாளர்கள் ஆணந்தி,ராணி,ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி செயலர் கண்ணதாசன்,அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து