சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய மூர்த்தி திருகோவில் தேர்திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      கன்னியாகுமரி

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய மூர்த்தி  திருகோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரு வடம் பிடித்து தேர் திருவிழாவை கொண்டாடினார்கள்.குமரி மாவட்டம்  சசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய மூர்த்தி கோவிலின் மார்கழி தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்தது. 

மார்கழி தேரோட்டம்

குமரிமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று  சுசீந்திரம் அருள் மிகு தாணுமாலையமூர்த்தி திருகோவில் இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது உண்டு. இவ்வாண்டிற்கான விழா கடந்த. 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து  26 ம் தேதி மக்கள் மார் சந்திப்பும், 28 ம் தேதி கருட தரிசனமும், 30 ம் தேதி  பல்லக்கில் சுவாமி வீதி உலா, யானை ஸ்ரீபலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 31 ம் தேதி  சிதம்பரேஸ்வரர்  வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திரு தேரோட்டம் நடந்தது.  இரவு 12 மணிக்கு சப்தவர்ணம் நிகழ்ச்சி நடந்தது.  விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   சுசீந்திரத்திற்கு நாகர்கோவில்,  கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி. துரை கண்காணிப்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.முன்னதாக திருதேரை மாவட்ட ஆட்சி தலைவர் சஜ்ஜன்சிங்சவான், மாவட்ட எஸ்பி துரை, எம்.பி விஜயகுமார், இந்து அறநிலையதுறை ஆணையர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து