சேலத்தில் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      சேலம்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கி உள்ளது. நேற்று முன் தினம் இரவு நள்ளிரவு முதலே அணைத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடும் திருப்பலியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து புத்தாண்டு தினாமான நேற்று அணைத்து திருக்கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சேலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற காவடி பழனியாண்டவர் திருக்கோவில் ஜாகிரம்மா பாளையத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு வைபவங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திரளான பக்தர்கள்
தன் ஒரு பகுதியாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகனுக்கு அதிகாலை முதல் பால் இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் தங்க அங்கி அணிவிக்கப்ட்டது. பின்னர் பல்வேறு விதமான வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குருக்கள் மந்திரம் முழங்க லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கலச பூஜை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டும், தங்க, வெள்ளி, மரகதம், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்தனர். பின்னர் வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க முருகன், வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த புத்தாண்டு வைப்பதை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

 

சிறப்பு பூஜை

இதே போல மிகவும் பழமை வாய்ந்த அருள் மிகு கோட்டை அழகிரி நாதர் திருக்கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மலையப்ப சாமி தங்க ஆபரணங்களில் காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபப்ட்டு சுமார் எட்டு அடி உயரமுள்ள அனுமானுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வெண்ணையில் பல்வேறு பழங்களை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டது. பட்டாச்சாரியார் வேதங்கள் முழங்க சிறப்பு அர்ச்சனை செய்து மஹாதீபாராதனை கான்பிக்கப்ட்டது. பெருமாளையும் அனுமானையும் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து