தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் என்.வெங்கடேஷ் பசுமைப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் “காபி வித் கலெக்டர்” என்ற புதுமையான நிகழ்ச்சியில், பள்ளி, மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று வல்லநாடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பசுமைப்பயணம்  மேற்கொண்டார்.தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகள், தன்னம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பொது வாழ்வில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்ற விதத்திலும், தங்களது திறமைகளை வளர்க்கின்ற விதத்திலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான கலந்துரையாடல் “காபி வித் கலெக்டர்” என்ற புதுமையான நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4.1.2018 அன்று “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்வி சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பள்ளி மாணவ மாணவியர்கள் மரம் வளர்ப்பு, நாற்றங்கால் அமைத்தல், மூலிகைச் செடிகளின் பயன்பாடுகள், விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பாக இருத்தல், முதலுதவி நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வன உயிரின கணக்கெடுப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், திருவைகுண்டம் வனசரகர் நெல்லைநாயகம் தலைமையில் குழு ஒன்று அமைக்ககப்பட்டுள்ளது.அதன்படி வல்லநாடு வெளிமான் சரணாலய பகுதியில், மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், தலைமையில், திருவைகுண்டம் வனசரகர் நெல்லைநாயகம் , 200 மாணவ, மாணவிகளுக்கு, மூலிகைச் செடிகளின் பயன்பாடுகள், விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பாக இருத்தல் மற்றும் முதலுதவி நடவடிக்கைகள், மரம் வளர்ப்பு, நாற்றங்கால் அமைத்தல், மலை ஏற்றம் மற்றும் வன உயிரின கணக்கெடுப்பு, தாவரங்கள் பற்றிய அரிய வகை கருத்துக்கள் மற்றும் தலைவலி, காய்ச்சல், உடலில் அலர்ஜி ஏற்படும் போது, அவற்றிலிருந்து நிவாரணம் பெற அரிய வகை மூலிகைகளின் மருத்துவ குணங்களை தெளிவாக பயிற்சியின் மூலம் அளித்தனர். வெளிமான் கொம்புகளையும் மாணவ, மாணவிகளிடம் காண்பித்தனர்.

அதனை தொடர்ந்து, சுமார் 2 கி.மீ தூரத்திற்கு மாவட்ட ஆட்சியருன் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட பசுமைப்பயணம் நடைபெற்றது. பின்னர், இக்கருத்தரங்கு மற்றும் பசுமைப்பயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், இது போன்ற கல்வி சுற்றுலா மாணவ, மாணவிகளாகிய எங்களுக்கு மிகுந்த பயனள்ளதாக அமைந்துள்ளது. இதன் மூலம் வன உயரினங்களிடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மூலிகை வகைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கற்றுக்கொண்டுள்ளோம். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற கல்வி சுற்றுலா தொடர்ந்து நடைபெற வேண்டும் என தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன்,துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஏ.எஸ்.லாவண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், திருவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் மற்றும் வன அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து