முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக 7070 நபர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழாவிற்கான கால்கோல் நடும் விழா

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      தேனி
theni jayalalitha 70 birthday 6 2 18

தேனி- புரட்சித்தலைவி முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் சார்பாக பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் 7070 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான கால்கோல் நடும் விழா நேற்று பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் நடைபெற்றது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவபடத்தை முகூர்த்தகால் நடும் இடத்திற்கு அருகில் வைத்து, முகூர்த்தகால் நடும் இடத்தில்  கழக நிர்வாகிகள் பயபக்தியுடன் பால், கோமியம் நவதானியம்  இட்டு பின்னர் முகூர்த்தகால் நடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் எம்.பி எஸ்.பி.எம். சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர்,   மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, தேனி நகர செயலாளர் முருகேசன்,  ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், தேனி ஒன்றிய பொறுப்பாளர்  முருகேசன்,   பெரியகுளம் இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் அன்பு, சின்னமனூர் நகர துணை செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ்,  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முத்து, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காஜாமுயுனுதீன்,  போடிநாயக்கனூர் ஒன்றிய பிரமுகர் குறிஞ்சிமணி, அரண்மனைபுதூர்சுப்பு, மணவாளன் வார்டு செயலாளர்கள் ஏர்செல் ரபீக்அகமது, தவமணி, முத்துப்பாண்டி, சிவக்குமார் மற்றும் ராஜவேல் உள்ளிட்ட கழக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து