முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சவுதி தடை

புதன்கிழமை, 6 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஐக்கிய அரபு அமீரகமும், கேரள பழங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து அனுப்பப்பட்ட 100 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் திருப்பி அனுப்பி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து