முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனுதாரர்களுக்கு உணவுபொட்டலங்களை கலெக்டர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி அதற்கு தீர்வு காணும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.  இக்கூட்டத்தில் அனைத்துத்துறைகளை சார்ந்த மாவட்ட தலைமை அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் குறித்த விபரங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்ய  வேண்டும்.  மனுக்கள் மீது மேற்;கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாரந்தோறும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்படும்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தகுதியான மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்.  இந்த கூட்டத்தில் 361 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.  இம்மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு பேசினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கோரிக்கை மனு வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து  மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ்  கோரிக்கை மனுக்களைப் பெற்றதோடு, அவர்கள் பசியாற  உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளை தனியாக அமரச் செய்து, அவர்கள் இருந்த இடத்திற்கு மாவட்ட கலெக்டர் மனுக்களைப் பெற்றார்.
 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர் காளிமுத்து உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து