முதன்முறை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      ராமநாதபுரம்
COLLECTOR ELECTION FIRST TIME VOTERS AWARENESS

ராமநாதபுரம்,-  ராமநாதபுரம் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்-2019 முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து முதன்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக ராமநாதபுரம் சையது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  குறிப்பாக முதன்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில்,  இன்றைய தினம் இராமநாதபுரம் சையது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,   மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் தலைமையில்; வாக்காளர் விழிப்புணர்வு குறித்த படக்காட்சி திரையிடப்பட்டது.   தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் அனைவரும் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க உள்ள இளம்தலைமுறையினரான மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும், இந்நிகழ்ச்சியில், கலெக்டர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.  தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்று கையொப்பமிட்டனர்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, உதவி தேர்தல் அலுவலர்ஃமாவட்ட வழங்கல் அலுவலர் எம்.மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் முத்துலட்சுமி, தமீம்ராஜா, சுரேஷ் உட்பட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து