முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 15-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
     தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக வரும் 15.06.2019 சனிக்கிழமை அன்று ராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்; காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் உள்@ர் நிறுவனங்களும் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன.  இம்மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார்துறை நிறுவனங்கள், இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தெரிவு செய்து கொள்ளலாம். எனவே, தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இந்த முகாம் மூலம் பணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்பட்டால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் இரத்து செய்யப்படமாட்டாது.  அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தங்கள் பெயர் பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட னகலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து