முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடகத்தில் கடந்த 5-ம் தேதி 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பெரும்பான்மைக்கு 6 எம்.எல்.ஏ.க்களே தேவை என்ற நிலையில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

கர்நாடகாவில் முந்தைய குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.  அந்த 17 பேரையும் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கு எதிராக 17 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தகுதி நீக்கம் செல்லும். அதே வேளையில் 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையே 2 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால், 15 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் 15 தொகுதிகளின் முடிவுகள் ஏறக்குறைய தெரிந்து விடும்.

225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால், இதில் இரு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால், 223 மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போது பா.ஜ.க.வுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்.எல்.ஏ.க்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடம் 34 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மேலும், பி.எஸ்.பி. கட்சிக்கு ஒரு இடம், நியமன எம்.எல்.ஏ. ஒருவர், சபாநாயகர் ஆகியோர் உள்ளனர். ஆதலால், எடியூரப்பா தனது பெரும்பான்மைக்கு 6 இடங்களில் வென்றாலே போதுமானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. 9 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. இதனால் முதல்வர் எடியூரப்பாவும், ஆளும் கட்சியினரும் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து