முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் விநியோகத் தொடர் மேலாண்மை திட்ட முதன்மை பதனிடும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2020      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில்  விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதன்மைப் பதனிடும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது தமிழக அரசு நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், கூட்டுப்பண்ணையத்திட்டம், குடிமராமத்து திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், மண் வளத்தை மேம்படுத்துதல், நவீன உத்திகளை கையாளுதல், விதை, நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பயிர்க்கடன் வழங்குதல், நிவாரண உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள் வழங்குதல், கடனுதவியுடன் கூடிய மானியத்தொகை தீவிர சாகுபடி முறை, நெல்நடவு இயந்திரங்கள்;, களை எடுக்கும் கருவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களினால் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை தவிர்த்திடும் பொருட்டு, மேற்கண்ட பொருட்களுக்கான  விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்த்தின் கீழ்  கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் ரூ.482.36 கோடி செலவில் முதன்மைப் பதினடும் மையங்கள் அமைத்திட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் பொம்மையகவுண்டன்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில்  விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதன்மைப் பதனிடும் மையம் ரூ.4.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு,  கடந்த ஆகஸ்டு மாதம் முதல் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் முருங்கை இலையை உலர்த்தி பொடியாக்கி மாத்திரையாக மாற்;றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சின்னமனூரில் முதன்மைப் பதனிடும் மையம் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் அபீடா தரச் சான்றிதழுடன் வாழைக் காய்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கம்பம் - ஐ மற்றும் கம்பம் - ஐஐ முதன்மைப் பதனிடும் மையங்கள் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் அனைத்து காய்கறிகளையும் சுத்தம் செய்து பதப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதன்மூலம், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களினால் ஏற்படும் வருவாய் இழப்பினை தவிர்த்திடும் முடியும். எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் அழுகும் நிலை ஏற்படுகின்ற காலங்களில் இம்மையங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என  தெரிவித்தார்.
 இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாலசந்தர், தேனி விற்பனைக் குழு செயலாளர் என்.ஜே.பால்ராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம், வேளாண் வணிக வேளாண்மை அலுவலர்  சங்கர நாராயணன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து